நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
27.அகமும் ஆசையும்


அகம்
ஆசைக்குள்
ஆட்பட்டுக்கொண்டிருந்தால்
ஆண்டவனும்
அகக்கண்களுக்கு
அகப்படபோவதில்லை,
ஆகமும்
அழியாமல்
அகிலத்தில்
அவதாரமெடுத்துக்கொண்டே
அலைந்துக்கொண்டிருக்கும்

அகம் - உள்ளம்
ஆகம் - உடம்பு,உயிர்
ஆசை - இச்சை
Labels: அகம், அழிவு, ஆகம், ஆசை, ஆண்டவன், இன்பம், இறைவன், உடம்பு, உள்ளம், கடவுள்
அன்புடன்
திகழ் at
2:31 PM

14 அன்புமொழிகள்:
அகரத்தில் தொடங்கும் வரிகளாலே
அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்
ஆன்மாவின் முக்திக்கு தடையாக
ஆசை நம்மை
ஆட்டுவிப்பதை.
ஓ...திகழ்,அ...விலேயே அசத்திவிட்டீர்கள்.பாவிப்பில் இல்லாத புதிய தமிழ் சொற்களும் அறியக்கூடியதாக இருக்கிறது.ஒரு திருத்தம்.அகம் ஆசைக்குள் என்று சொன்னால் நன்றாயிருக்குமே.
December 22, 2008 11:16 PMஅழகிய சொல்லடுக்கு..
December 22, 2008 11:55 PM/ ராமலக்ஷ்மி said...
அகரத்தில் தொடங்கும் வரிகளாலே
அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்
ஆன்மாவின் முக்திக்கு தடையாக
ஆசை நம்மை
ஆட்டுவிப்பதை./
தங்களின் பதிலில்
தமிழ் துள்ளி விளையாட கண்டேன்
நன்றிங்க
/ஹேமா said...
ஓ...திகழ்,அ...விலேயே அசத்திவிட்டீர்கள்.பாவிப்பில் இல்லாத புதிய தமிழ் சொற்களும் அறியக்கூடியதாக இருக்கிறது.ஒரு திருத்தம்.அகம் ஆசைக்குள் என்று சொன்னால் நன்றாயிருக்குமே./
தங்களின் கருத்துப்படி
திருத்திக்கொண்டேன்
வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி
/ பாச மலர் said...
அழகிய சொல்லடுக்கு../
இப்படி சொல்லும்பொழுது தான் தமிழே
இனிக்கிறது பாருங்கள்
தங்களின் கவிமழையில் நனைய
அன்பர்களில் நானும் ஒருவன்
தங்களின் கவிதைகளை எதிர்ப்பார்த்துக்
காத்திருக்கிறேன்.
கருத்துக்கு நன்றிங்க
ஆசை நிரம்பிய
அகத்தில்
ஆண்டவன் இல்லை..
அடடே
அர்த்தத்தோடும்
அழகோடும்
அருமையான கவிதை..
/இசக்கிமுத்து said...
ஆசை நிரம்பிய
அகத்தில்
ஆண்டவன் இல்லை..
அடடே
அர்த்தத்தோடும்
அழகோடும்
அருமையான கவிதை../
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
திகழ்,என் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்கள்.
January 1, 2009 6:03 PMநன்றி ஹேமா
January 1, 2009 8:56 PMஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
January 1, 2009 9:35 PMஅதன் ஆகமம் என்பது சரியாக இருக்குமா? ஆகமம் என்பது ஆசை கொள்பவனின் ஆகமமா அல்லது ஆசையின் ஆகமமா?
கவிதை நன்றாக உள்ளது, வாழ்த்துகள்!
/தமிழன்-கறுப்பி... said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.../
நன்றி
நண்பரே
/ழமைபேசி said...
அதன் ஆகமம் என்பது சரியாக இருக்குமா? ஆகமம் என்பது ஆசை கொள்பவனின் ஆகமமா அல்லது ஆசையின் ஆகமமா?
கவிதை நன்றாக உள்ளது, வாழ்த்துகள்!/
வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றிகள்
நண்பரே
Post a Comment
< < முகப்பு









