நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
29.பார்வை(கதிரவன்)


இருக்கும்வரை
இருளை ஒழி
இறந்த பின்
இன்னொருவருக்கு ஒளி
இது தான்
இயற்கையின் ஒலி

ஒழி - வெளிச்சத்தைக் கொடு,அழி
ஒளி - கண்தானம்,பார்வை
ஒலி - குரல்,எண்ணம்,கருத்து
இந்த வரிகளை எழுதியது ஆறு மாதங்களுக்கு முன், இன்னும் விரிவாக இதை எழுத நினைந்து இருந்த பொழுது இந்தக் கவிதையைக் கண்டயுடன் இடுகை இட விழைந்தேன்.
அன்புடன்
திகழ் at
5:48 PM
6 அன்புமொழிகள்

28.நிம்மதி


நிம்மதி என்பது
நடைபெறுவதிலும்
நிறைவேறுவதிலும் இல்லை.
நினைப்பதில் தான் இருக்கிறது என்று
நம்புங்கள்.
நிம்மதி என்பது
நமக்கு நாமே
வழங்கும்
வெகுமதி என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.

Labels: நம்பிக்கை, நினைப்பு, நிம்மதி
அன்புடன்
திகழ் at
11:11 AM
25 அன்புமொழிகள்

27.அகமும் ஆசையும்


அகம்
ஆசைக்குள்
ஆட்பட்டுக்கொண்டிருந்தால்
ஆண்டவனும்
அகக்கண்களுக்கு
அகப்படபோவதில்லை,
ஆகமும்
அழியாமல்
அகிலத்தில்
அவதாரமெடுத்துக்கொண்டே
அலைந்துக்கொண்டிருக்கும்

அகம் - உள்ளம்
ஆகம் - உடம்பு,உயிர்
ஆசை - இச்சை
Labels: அகம், அழிவு, ஆகம், ஆசை, ஆண்டவன், இன்பம், இறைவன், உடம்பு, உள்ளம், கடவுள்
அன்புடன்
திகழ் at
2:31 PM
14 அன்புமொழிகள்

26.அகவையும் அகமும்


அகவை என்பது
அகத்திற்கு
உட்பட்டது
உங்களின் உள்ளம்
உடம்பு என்னும்
உடன்பாட்டை
உடைத்து எறிந்தால்
வாழ்க்கை என்பது
வண்ணத்துப்பூச்சியாய்
வட்டமிட்டு
சிறகடித்துப் பறக்கும்.

ஆங்கிலத்தில் - மார்க்கு துவின்
மொழியாக்கம்
Labels: அகம், அகவை, ஆகம், உடம்பு, உள்ளம், வண்ணத்துப்பூச்சி, வயது, வாழ்க்கை
அன்புடன்
திகழ் at
12:23 PM
14 அன்புமொழிகள்

25.வெற்றிக்கான வழி


வெற்றியை
தூக்கி வைத்துக்கொள்ள
தலையும்
தோல்வியைத்
தேக்கி வைத்துக்கொள்ள
உள்ளமும்
உகந்த இடமும் அல்ல
உயர்வுக்கும் வழியும் அல்ல.

ஆங்கிலத்தில் - வின்சடன் சர்ச்சில்
மொழியாக்கம்
Labels: அகம், உயர்வு, உள்ளம், சிரம், தலை, தோல்வி, வழி, வெற்றி
அன்புடன்
திகழ் at
3:39 PM
13 அன்புமொழிகள்

24.கீதை சொல்லும் செய்தி


உடல் எனும் தேரில்
ஊர்வலம் செல்லும்
உயிர்ப்பொருள்
புலன் எனும்
பரியின் பிடியை
பரம்பொருளிடம் ஒப்படைத்துவிட்டால்
பயமற்ற
பயணமற்ற
பாதை அமையும் எனும்
பாடத்தை போதிப்பது தான்
கீதை சொல்லும் செய்தி

உயிர்ப்பொருள் - ஜீவாத்மா
பரம்பொருள் - பரமாத்மா
பயணமற்ற - ஜனனமற்ற
பரி - குதிரை
மொழியாக்கம்
Labels: உடல், கீதை, குதிரை, ஜீவாத்மா, பயணம், பயம், பரமாத்மா, பரம்பொருள், பரி, புலன்
அன்புடன்
திகழ் at
9:00 PM
13 அன்புமொழிகள்

23.கேள்விக்கணைகள்


அடுத்தவர் மேல்
அம்புக்கணைகளை
அள்ளி வீசும் முன்
உங்கள்
உள்ளங்களை, கொஞ்சம்
உரசிப் பாருங்கள். நீங்களே
உணர்ந்துக் கொள்வீர்கள்
அது தங்கம்
அல்ல என்று

Labels: அகம், அம்புக்கணை, உள்ளம், கேள்வி, தங்கம்
அன்புடன்
திகழ் at
7:49 PM
8 அன்புமொழிகள்

22.வாழ்க்கை


வாழ்க்கை ஒரு
வானவில், அதில்
துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.

மொழியாக்கம்
Labels: இன்பம், ஒளி, துன்பம், நிகழ்வு, மழை, வண்ணம், வானவில், வாழ்க்கை
அன்புடன்
திகழ் at
10:51 AM
18 அன்புமொழிகள்









